இந்தியா

'தெலங்கானாவின் பெருமை' இணையத்தில் டிரெண்டிங்: காரணம் என்ன?

தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

DIN


தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என்ற ஹேஷ்டேக் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. 

செகந்தராபாத்தில், உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் செருப்பை தெலங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய் குமார் கையில் எடுத்துப் போட்டார். இது தொடர்பான விடியோவை, தெலங்கானாவின் பெருமை எனக் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து விமர்சித்து வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, தெலங்கானாவின் பெருமை என்ற ஹேஷ்டேக்கில் பொதுமக்கள் பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். 

தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள உஜ்ஜயினி கோயிலில் உள் துறை அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம் செய்தார். அப்போது பாஜக மாநில தலைவர் பண்டி சஞ்சய் குமார் உள்பட பலர் உடன் இருந்தனர். 

சாமி தரிசனம் செய்து வெளியே வந்தபோது, அமித் ஷாவை முந்திக்கொண்டு சென்ற சஞ்சய் குமார், அமித் ஷாவின் செருப்புகளை கையில் எடுத்துப்போட்டார். 

இதனை தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவர் கே.டி.ராமா ராவ் தெலங்கானாவின் பெருமை என ஹேஷ்டேக்கிட்டு சுட்டுரையில் பகிர்ந்தார். தெலங்கானாவின் சுயமரியாதையை அவர் இழிவுபடுத்தியுள்ளதாகவும் சுட்டுரையில் விமர்சித்துள்ளார். 

இதனைத் தொடர்ந்து தெலங்கானாவின் பெருமை (TelanganaPride) என ஹேஷ்டேக்கிட்டு பொதுமக்கள் பலரும் இந்த விடியோ குறித்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அறிமுக படத்திலேயே ஆச்சரியம்... சய்யாரா வசூல் எவ்வளவு தெரியுமா?

சட்டவிரோத குடியேற்றம்: தில்லியில் 5 வங்கதேசத்தினர் கைது!

கையில் பணமில்லை.. நடைபாதையில் படுத்துறங்கிய மென்பொருள் நிறுவன ஊழியர்!

திமுக ஆட்சியில் நிறையும் இருக்கு, குறையும் இருக்கு!பவர்கட் பிரச்னைக்கு தீர்வில்லை!-பிரேமலதா விஜயகாந்த்

சத்ரபதி சிவாஜி குறித்த புதிய படம்.. தடை செய்ய ஹிந்துத்துவ அமைப்பு வலியுறுத்தல்! ஏன்?

SCROLL FOR NEXT