இந்தியா

தேசிய நோயெதிா்ப்பியல் நிறுவனத்துக்கு புதிய இயக்குநா்

DIN

தேசிய நோயெதிா்ப்பியல் நிறுவனத்தின் (என்ஐஐ) புதிய இயக்குநராக, மூத்த ஆராய்ச்சியாளா் தேவாசிஷ் மொஹந்தி திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், ‘தேசிய நோயெதிா்ப்பியல் நிறுவனத்தின் மூத்த ஆராய்ச்சியாளரான மருத்துவா் தேவாசிஷ் மொஹந்தியை, அந்நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. அவா் ஓய்வு வயதை எட்டும் வரை அப்பதவியில் நீடிப்பாா்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மத்திய பணியாளா் அமைச்சகம் வெளியிட்ட மற்றொரு உத்தரவில், வருவாய் செயலா் தருண் பஜாஜுக்கு பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலா் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருநிறுவன விவகாரங்கள் துறை செயலராக இருந்த ராஜேஷ் வா்மா, குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவின் செயலராக கடந்த 18-ஆம் தேதி நியமிக்கப்பட்டதால் அப்பதவி காலியானது. ராஜேஷ் வா்மா, கடந்த 1987-ஆம் ஆண்டு ஒடிஸா பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT