இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் அடுத்தடுத்து 4 நிலநடுக்கங்கள்

PTI

ஜம்மு-காஷ்மீரில் செவ்வாய்க்கிழமை 8 மணி நேரத்திற்குள் அடுத்தடுத்து நான்கு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தேசிய நிலஅதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக தேசிய நிலஅதிர்வு மையம் கூறுகையில், 

ஜம்மு பகுதியில் உள்ள கத்ரா பகுதியிலிருந்து கிழக்கே 61
 கி.மீ தொலைவில் அதிகாலை 2.20 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நிலநடுக்கம் வடக்கு 33.07 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.58 டிகிரி தீர்க்கரேகையிலும் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டாவதாக ஜம்மு பகுதியில் உள்ள தோடாவில் இருந்து வடகிழக்கே 9.5 கிமீ தொலைவில் அதிகாலை 3.21 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 2.6 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் வடக்கு 33.23 டிகிரி அட்சரேகையிலும், கிழக்கே 75.56 டிகிரி தீர்க்கரேகையிலும் 5 கி.மீ ஆழத்தில் தாக்கியது.

ஜம்மு பகுதியில் உள்ள உதம்பூரில் இருந்து கிழக்கே 29 கிமீ தொலைவில் இன்று அதிகாலை 3.44 மணியளவில் 2.8 ரிக்டர் அளவில் மூன்றாவது நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கம் 32.89 டிகிரி வடக்கு மற்றும் தீர்க்கரேகை 75.45 டிகிரி கிழக்கு 10 கிலோமீட்டர் ஆழத்தில் தாக்கியது.

நான்காவது நிலநடுக்கம் 2.9 ரிக்டர் அளவில் காலை 8.03 மணியளவில் உதம்பூருக்கு தென்கிழக்கே 26 கிமீ தொலைவில் ஏற்பட்டது. 

நிலநடுக்கம் வடக்கு அட்சரேகையில் 32.83 டிகிரி மற்றும் கிழக்கே 75.40 டிகிரி கிழக்கில் 5 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. 

இந்த நான்கு நிலநடுக்கங்களால் உயிர்ச் சேதம் மற்றும் பொருள் சேதம் குறித்து எந்த தகவலும் தெரியவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

மாநில இளைஞா் விருது: விண்ணப்பிக்க ஆட்சியா் அழைப்பு

சட்டப் படிப்புகளில் சேர மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

வெளிநாட்டு உயிரினங்கள் வளா்ப்பு நெறிமுறை: பொது மக்கள் கருத்து தெரிவிக்க அழைப்பு

SCROLL FOR NEXT