இந்தியா

என்டிடிவி செய்தி நிறுவனத்தின் 30% பங்குகளை வாங்கும் அதானி குழுமம்!

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

DIN

இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 30 சதவீதப் பங்குகளை வாங்க உள்ளதாக அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

அதானி குழுமத்தின் நிறுவனர் கௌதம் அதானி உலகளவில் மிக வேகமாக வளர்ந்து வரும் தொழிலதிபர். உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் 4-வது இடத்தில் இருப்பவர்.

அதானி தன் குழுமத்தை விரிவாக்கும் பொருட்டு புதிதாக பல தொழில்களிலும் முதலீடு செய்து வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற 5ஜி ஏலத்தில் அதானி நெட்வோர்க் என்கிற புதிய நிறுவனம் பங்குபெற்றது.

மேலும், அதானி ஒடிசா மாநிலத்தின் ராயகடா பகுதியில் அலுமினிய சுத்திகரிப்பு ஆலையை அமைப்பதற்காக அம்மாநில அரசிடம் உரிமம் பெற்றதுடன் ரூ.41,000 கோடியை அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய உள்ளார்.

இந்நிலையில், இந்தியாவின் பிரபல செய்தி நிறுவனமான என்டிடிவியின் 29.18 சதவீதப் பங்குகளை அதானி குழுமம் வைத்துள்ள நிலையில், மேலும் 26% பங்குகளை வாங்க பங்குதாரர்களிடம் சலுகையை அறிவித்துள்ளது.

அந்நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கை கையகப்படுத்த உள்ளதால் நிர்வாக முடிவுகளைக் எடுக்கக் கூடிய பங்குதாரராகவும் அதானி குழுமம் செயல்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT