இந்தியா

லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை

பிகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

DIN


பாட்னா: பிகாரில் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 

பிகாரில் ரயில்வே வேலைவாய்ப்பு முறைகேடு வழக்கு, நில மோசடி தொடர்பாக முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துக்கு நெருக்கமான ஆர்ஜேடி நிர்வாகிகள் மூவர் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

பாட்னாவில் உள்ள ஆர்ஜேடி முன்னாள் எம்எல்சி சுபோத் ராய் வீடு மற்றும் நில மோசடி தொடர்பாக ஆர்ஜேடி தலைவர்கள் சுனில் சிங், அஷ்பாக் கரீம் மற்றும் ஃபயாஸ் அகமது ஆகியோரின் வீடுகளிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து எம்.பி மனோஜ் ஜா கூறுகையில், இது சிபிஐ சோதனை என்று சொல்லி பயனில்லை, இது பாஜகவின் சோதனை. அவர்கள் இப்போது பாஜாகவின் கீழ் வேலை செய்கிறார்கள், அவர்களின் அலுவலகங்கள் பாஜக என்ற எழுத்துடன் இயங்குகின்றன என குற்றம்சாட்டியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT