புது தில்லி: தேர்தல் வாக்குறுதியாக இலவசங்களை அறிவிப்பதற்கு எதிரான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா யோசனை தெரிவித்துள்ளார்.
இலவசங்கள் தொடர்பான வழக்கில் மத்திய அரசு நிபுணர் குழு அமைக்கலாம் அல்லது அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டி முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்துள்ளது.
மேலும், இலவசங்கள் தொடர்பான ஒரு முடிவு எட்டப்படுவதற்கு முன் ஒரு நீண்ட ஆழமான விவாதம் தேவை. தேர்தலுக்கு பின்னர் அறிவிக்கப்படும் இலவசங்களை கட்டுப்படுத்துவது பற்றியும் கருத்தில் கொள்ள வேண்டும். பொருளாதாரத்தை அழிக்கக்கூடிய இலவசங்கள் கவனிக்கப்பட வேண்டிய அம்சம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இலவசங்கள் தொடர்பான வழக்கு 3 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.