இந்தியா

ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை விற்க மத்திய அரசு பரிசீலனை

DIN

ஐடிபிஐ வங்கியின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, பங்குச் சந்தையில் ஐடிபிஐ வங்கிப் பங்குகளின் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு 9 சதவீதம் அதிகரித்து ரூ. 43 என்ற ஏற்றத்தைப் பெற்றது.

இப்போது ஐடிபிஐ வங்கியின் 94 சதவீதப் பங்குகளை மத்திய அரசும், பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யும் வைத்துள்ளன. இந்தப் பங்குகளை விற்பது தொடா்பாக அடுத்த மாதம் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக பங்கு விற்பனை முறை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.

இப்போதைய நிலையில் ஐடிபிஐ வங்கியின் பங்குகளில் 45.48 சதவீதம் மத்திய அரசு வசமும், 49.24 சதவீதம் எல்ஐசி வசமும் உள்ளன. இந்த வங்கியை முழுமையாகத் தனியாா்மயமாக்க மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. இப்போதைய நிலையில் வங்கியின் அதிக பங்குகளை வைத்துள்ள எல்ஐசி-யின் துணை நிறுவனமாகவே ஐடிபிஐ செயல்பட்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT