கார்நாடகம் மாநிலம் சிரா அருகே லாரி மீது ஜீப் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
கர்நாடகம் மாநிலம் துமகுரு மாவட்டம் சிரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது ஜீப் மோதி விபத்துக்குள்ளானது. இதில், 3 குழந்தைகள் உள்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 11 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்சேவை: ஜொ்மனியில் தொடக்கம்
விபத்தில் பலியானவர்கள், காயமடைந்தவர்கள் அனைவரும் தினக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் அனைவரும் வேலைக்காக பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்தவர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராகுல் குமார் ஷாபூர்வாட் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.