ராகுலின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம்: குலாம் நபி ஆசாத் 
இந்தியா

ராகுலின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம்: குலாம் நபி ஆசாத்

2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

DIN

புது தில்லி: 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்று குலாம் நபி ஆசாத் குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக இன்று காலை அறிவித்த குலாம் நபி ஆசாத், தனது விலகல் கடிதத்தை கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், ஜம்மு -காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வருமான குலாம் நபி ஆசாத்தின் விலகல், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியிருக்கும் குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது காரசார குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். அதாவது, காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களாலேயே எடுக்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சியில் இருந்த கலந்தாலோசனை  முறையை முற்றிலும் ராகுல் ஒழித்துவிட்டார்.

கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெற்ற தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத் தனமான நடவடிக்கையே காரணம். காங்கிரஸ் கட்சியில் சோனியா காந்தி பெயரளவில் மட்டுமே தலைவராக இருக்கிறார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கன்னியாகுமரியில் மேற்குக் கடற்கரைச் சாலையில் தமிழ் எண்களுடன் மைல் கல்!

அழகாகப் பூத்தது டாட்டூ... ப்ரியா பிரகாஷ் வாரியர்!

பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் மெட்ரோ திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு!

ஆசியக் கோப்பை: ஐக்கிய அரபு அமீரக அணி அறிவிப்பு!

கூலி ஓடிடி தேதி!

SCROLL FOR NEXT