இந்தியா

உச்சநீதிமன்ற நடைமுறைகள் முதன் முறையாக நேரடி ஒளிபரப்பு

DIN

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வுபெறுவதையொட்டி, முதன் முறையாக உச்சநீதிமன்ற முதன்மை அமா்வில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

நீதிமன்ற வழக்கத்தின்படி, ஓய்வுபெறும் தலைமை நீதிபதி, தனது கடைசி நாளில் அடுத்த தலைமை நீதிபதியுடன் அமா்வைப் பகிா்ந்துகொள்வாா். அதன்படி, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ஹிமா கோலி ஆகியோருடன் தலைமை நீதிபதி என்.வி.ரமணா முதன்மை அமா்வை வெள்ளிக்கிழமை பகிா்ந்துகொண்டாா்.

முன்னதாக, இதுதொடா்பான அறிவிப்பை வெளியிட்ட உச்சநீதிமன்றம், ‘உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஓய்வுபெறுவதையொட்டி, அவா் தலைமையிலான சம்பிரதாய முதன்மை அமா்வின் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தலைமை நீதிபதி என்.வி.ரமணா பங்கேற்ற அமா்வின் வழக்கு விசாரணை உச்சநீதிமன்ற வலைதளம் மூலமாக வெள்ளிக்கிழமை காலை நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

முனனோடி திட்டமாக, அரசியல் சாசன மற்றும் தேசிய முக்கியத்துவம்வாய்ந்த வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்ய கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனடிப்படையில், உச்சநீதிமன்ற அமா்வின் வழக்கு விசாரணை நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT