இந்தியா

ராய்பூரில் என்ஐஏ அலுவலகத்தை நாளை திறந்து வைக்கிறார் அமித் ஷா

PTI

ராய்பூரில் தேசிய புலனாய்வு முகமையின்(என்ஐஎ) அலுவலக கட்டடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை திறந்து வைக்கிறார். 

மத்திய அரசின் தேசிய புலனாய்வு முகமை நாட்டின் 12 இடங்களில் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் தில்லியில் உள்ளது. இந்நிலையில் ராய்பூரில் புதிய கிளை அலுவலக கட்டடம் திறக்கப்பட உள்ளது. 

இதற்காக அமித் ஷா சனிக்கிழமை மதியம் 2 மணியளவில் சுவாமி விவேகானந்தா விமான நிலையத்திற்கு வரவுள்ளார். மேலும் என்ஐஏ கட்டடத்தைத் திறப்பதற்காக நவ ராய்பூரின் செக்டர்-24-க்கு புறப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

பின்னர், பண்டிட் தீனதயாள் உபாத்யாய் மோடி@20: டிரிம்ஸ் மீட்டிங் டெலிவலி என்ற கருத்தரங்கில் கலந்துகொள்கிறார். 

இரவு 7.20-க்கு தில்லி புறப்படுவதற்கு முன்பு, கட்சியின் மாநில அலுவலகமான குஷாபாவ் தாக்ரே பரிசாரில் பாஜக தலைவர்களின் கூட்டத்திற்கு அவரி தலைமை தாங்குகிறார். 

காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கரில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற உள்ளது. 

சுக்மா மற்றும் பிஜாப்பூர் மாவட்டங்களின் எல்லையில் நக்சலைட் தாக்குதலில் 22 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டதை அடுத்து ஷா கடைசியாக ஏப்ரல் 2021இல் சத்தீஸ்கருக்குச் சென்றிருந்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குளித்தலை அருகே உணவு தேடி வந்த புள்ளிமான் மீட்பு

அரவக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்

துறையூரில்  மாட்டு வண்டி  பந்தயம்

விபத்தில் காயமடைந்த திமுக பிரமுகருக்கு நிதியுதவி

ஆலங்குளம் சுற்று வட்டார கிராமங்களில் மழை

SCROLL FOR NEXT