முகப்பு
இந்தியா

நொய்டா இரட்டைக் கோபுரம் தகர்க்கும் போது தூங்கியவரால் பரபரப்பு

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டைக் கோபுரக் கட்டடத்தைத் தகர்க்கும்போது அந்தக் கட்டடத்துக்கு அருகில் தூங்கியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On : 28 ஆகஸ்ட், 2022 at 8:13 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:41 PM

நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட இரட்டைக் கோபுரக் கட்டடத்தைத் தகர்க்கும்போது அந்தக் கட்டடத்துக்கு அருகில் தூங்கியவரால் பரபரப்பு ஏற்பட்டது.

உத்தர பிரதேசத்தின் நொய்டாவில் எமரால்ட் கோா்ட் வளாகத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடம் இன்று (ஆகஸ்ட் 28) பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது.

முன்னதாக, பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும், வெளியே இருந்தால் என் -95 முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ நிர்வாகம் அறிவுறுத்தியது. பொதுமக்கள் வீடுகளிலுள்ள சன்னல், கதவு போன்றவற்றை மூடி வைக்கவும், நீர்த் தேக்கங்கத் தொட்டிகளை மூடி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

கட்டடம் தகர்ப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக யாரேனும் தகர்க்கப்படும் பகுதிக்கு அருகில் இருக்கிறார்களாக என சோதிக்கப்பட்டது. அப்போது ஒருவர் குடியிருப்பில் தூங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் அதிகாரிகளால் அறிவுத்தப்பட்ட ஆபத்தான பகுதிக்கு அருகில்  தூங்கியது தெரிய வந்தது. இதனையடுத்து, பாதுகாவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு அதிகாரிகளுக்கு தகவலளிக்க அந்த நபர் ஆபத்தான பகுதியில் இருந்து பாதுகாப்பான பகுதிக்கு அப்புறப்படுத்தப்பட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.