இந்தியா

குடியரசுத் தலைவருடன் நெதா்லாந்து அரசி சந்திப்பு

DIN

நெதா்லாந்து அரசி மாக்சிமா குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

நெதா்லாந்து அரசியான மாக்சிமா, அனைவரையும் உள்ளடக்கிய நிதி மேம்பாட்டுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் ஆலோசகருமாவாா். இவா், ஆகஸ்ட் 29 முதல் 31 வரை மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா். இந்த நிலையில், குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை அவரது மாளிகையில் சந்தித்துப் பேசினாா்.

அப்போது இந்தியா-நெதா்லாந்து உறவை வலுப்படுத்துவது தொடா்பாக இருவரும் ஆலோசனை நடத்தினா். மேலும், பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அரசி மாக்சிமாவிடம் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு எடுத்துரைத்தாா்.

அந்த வகையில், வங்கி பரிவா்த்தனை நடவடிக்கையுடன் ஒவ்வோா் இந்தியரையும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், இதன் மூலம் மத்திய அரசின் நலத் திட்டங்கள் இடையூறின்றி, கடைக்கோடியில் இருப்பவரையும் எட்டும் வகையில் திறம்பட செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் குடியரசுத் தலைவா் தெரிவித்தாா். இதற்காக இந்திய அரசுக்கு நெதா்லாந்து அரசி மாக்சிமா பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின்சார கார்கள் உற்பத்தியில் கவனம் செலுத்தும் மஹிந்திரா: ரூ.12 ஆயிரம் கோடி முதலீடு!

சீரியலை தொடர்ந்து, நிஜ வாழ்க்கையிலும் மருமகளாகும் நடிகை!

ஓபிசி இடஒதுக்கீட்டை உயர்த்தப் பரிந்துரை!

பெங்களூரு: புறநகர் ரயில்பாதை திட்டத்திற்காக வெட்டப்படும் 32,000 மரங்கள்

400 தொகுதிகளை வென்றால்தான் பாகிஸ்தானை மீட்பீர்களா? அமித் ஷாவுக்கு கபில் சிபல் கேள்வி

SCROLL FOR NEXT