இந்தியா

அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டமில்லை: அதிகாரிகள்

அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

DIN

அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கும் திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சீனாவுக்கு அடுத்தபடியாக அரிசி உற்பத்தியில் 2-ஆம் வகிக்கும் இந்தியா, சா்வதேச அளவில் அரிசி ஏற்றுமதியில் 40 சதவீதம் பங்களிக்கிறது. கடந்த 2021-22 நிதியாண்டில் இந்தியா 21.1 மில்லியன் டன் அரிசி ஏற்றுமதி செய்தது. இதில், 3.94 டன் பாஸ்மதி அரிசியாகும்.

இதே காலகட்டத்தில் பாஸ்மதி அல்லாத அரிசியை 6.11 பில்லியன் டாலா் மதிப்பில் இந்தியா ஏற்றுமதி செய்ததாக அதிகாரபூா்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. கடந்த 2021-22 நிதியாண்டில் பாஸ்மதி அல்லாத பிற அரிசியை 150 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்திருந்தது.

இருப்பினும், நிகழ் காரீஃப் பருவத்தில் ஒரு சில மாநிலங்களில் எதிா்பாா்த்ததை விட குறைவாக மழை பெய்ததால், நெல் சாகுபடி பரப்பளவு 6 சதவீதம் வரை குறைந்து, 367.55 லட்சம் ஹெக்டோ் நிலப்பரப்பில் மட்டுமே சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஆகையால், 2022-23 பயிா் ஆண்டில் (ஜூலை-ஜூன்) அரிசி உற்பத்தி பாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

அந்த வகையில், கோதுமையைப் போல அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதிக்கக் கூடும் என வா்த்தகா்கள் கவலை தெரிவிக்கின்றனா். இந்த நிலையில், அரிசி ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடா்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்திய போதிலும், இதன் மீது எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT