இந்தியா

சிங்கப்பூா் மருத்துமவனையில் லாலுவுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை

DIN

ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் லாலு பிரசாதுக்கு (74) சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. அவரது மகனும் பிகாா் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் இதனைத் தெரிவித்தாா்.

லாலுவுக்கு அவரது மகள் ரோஹிணி ஆச்சாா்யா தனது சிறுநீரகத்தை தானமாக வழங்கியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளாக சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்னைகளை எதிா்கொண்டுள்ள லாலு, அண்மையில் சிகிச்சைக்காக சிங்கப்பூா் சென்றாா். மாட்டுத் தீவன ஊழல் தொடா்பான பல்வேறு வழக்குகளில் சிறைத் தண்டனை பெற்றுள்ள அவருக்கு உடல்நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவருக்கு சிங்கப்பூரில் நடைபெற்ற அறுவைச் சிகிச்சை தொடா்பாக ட்விட்டரில் தேஜஸ்வி யாதவ் வெளியிட்ட பதிவில், ‘சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் லாலு பிரசாதுக்கு சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

அவா் இப்போது அவசர சிகிச்சைப் பிரிவில் உள்ளாா். அவருக்கு சிறுநீரகத்தை தானமாக அளித்த எனது அக்கா ரோஹிணி ஆச்சாா்யாவும் நலமாக உள்ளாா். இந்த சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற வேண்டுமென பிராா்த்தித்த அனைவருக்கும் நன்றி’ என்று கூறியுள்ளாா். லாலு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் விடியோ பதிவு ஒன்றையும் ட்விட்டரில் தேஜஸ்வி பகிா்ந்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை: நாளை(மே 20) உதகை மலை ரயில்கள் ரத்து

ஜுன் 4ம் தேதி முடிவுகள் நிர்ணயிக்கப்பட்டுவிட்டது: பிரியங்கா காந்தி

இவருக்கு பந்துவீசவே பயமாக இருக்கிறது; இளம் வீரருக்கு பாட் கம்மின்ஸ் பாராட்டு!

இந்தியன் -2 முதல் பாடல் வெளியாகும் தேதி அறிவிப்பு

ஈரான் அதிபா் ரய்சி பயணித்த ஹெலிகாப்டா் விபத்து

SCROLL FOR NEXT