இந்தியா

குஜராத் தேர்தல் தோல்வி: காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ராஜிநாமா

குஜராத் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரகு சர்மா தனது தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

DIN

குஜராத் மாநில காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் ரகு சர்மா தனது தேர்தல் பொறுப்பாளர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு பொறுப்பேற்று தனது காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் பதவியை அவர் ராஜிநாமா செய்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ரகு சர்மா தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளதை குஜராத் மாநில காங்கிரஸ் அமைப்பும் உறுதி செய்துள்ளது. மேலும், குஜராத்தின் காங்கிரஸ் தலைவர் ஜகதீஷ் தாக்கூரும் விரைவில் தனது பதவியை ராஜிநாமா செய்ய உள்ளதாகத் தெரிகிறது.

தேர்தல் தோல்வி குறித்துப் பேசிய குஜராத் மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் தோஷி கூறியதாவது: நாங்கள் எங்களது கடின உழைப்பை கொடுத்திருந்த போதிலும், எதிர்பாராத வகையில் இந்தத் தோல்வி அமைந்துள்ளது. நாங்கள் இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு வருவோம் என்றார்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (டிசம்பர் 8) காலை முதல் தொடங்கிய நிலையில், பாஜக 150க்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓணம்: சென்னை - கண்ணூர் இடையே சிறப்பு ரயில்! முன்பதிவு தொடங்கியது!

இளைஞர் தூக்கி வீசப்பட்ட விவகாரம்: விஜய், பவுன்சர்கள் மீது வழக்குப் பதிவு!

விநாயகர் சதுர்த்தி: ராகுல் காந்தி வாழ்த்து!

தனி விமானம் மூலம் பிகார் புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

கனமழை, வெள்ளத்தில் தத்தளிக்கும் ஜம்மு - காஷ்மீர்: நிலச்சரிவில் சிக்கி 30 பேர் பலி!

SCROLL FOR NEXT