மாண்டஸ் புயல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எச்சரிக்கை 
இந்தியா

மாண்டஸ் புயல்: திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்காக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.

DIN

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு வட மேற்காக நகர்ந்து நேற்று புயலாக (மாண்டஸ்) மாறியது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வட மேற்காக நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது நேற்று இரவு 11.30 மணியளவில் புயலாக (மாண்டஸ்) வலுப்பெற்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டுள்ளது.

இது நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே புயலாக வலுபெற்று கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம் காரணமாக கடலோர மாவட்டங்கள் மட்டுமின்றி திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் புயல் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கும் முன்னெச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் நெல்லூர், திருப்பதி, பிரகாசம் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே, திருப்பதியில் கனமழை காரணமாக கட்டமைப்புகள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகி, சாலைகள் உள்ளிட்டவை சேதமடைந்த காரணத்தால், இந்த முறை திருப்பதி கோயிலில் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT