இந்தியா

குஜராத்தைப் போன்றே தெலங்கானா தேர்தல் முடிவுகளும் இருக்கும்: பாஜக

குஜராத்தின் தேர்தல் முடிவுகளைப் போலவே தெலங்கானாவிலும் பாஜக ஆட்சியமைக்கும் என தெலங்கானா மாநில பாஜகத் தலைவர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.

DIN

குஜராத்தின் தேர்தல் முடிவுகளைப் போலவே தெலங்கானாவிலும் பாஜக ஆட்சியமைக்கும் என தெலங்கானா மாநில பாஜகத் தலைவர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார்.


தெலங்கானா குடும்ப ஆட்சி செய்து வருவதாகவும், மக்கள் தெலங்கானா ராஷ்டிரிய சமிதியின் மீது அதிருப்தியில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியிருப்பதாவது: குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இது மாபெரும் வெற்றியாகும். பலர் பாஜகவின் புகழை கெடுக்க நினைத்தபோதிலும் இந்த வெற்றி சாத்தியமாகியுள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் அடிக்கடி குஜராத் மாடல் குறித்து அங்கு என்ன வளர்ச்சி இருக்கிறது என்று கேட்பார். அவர் இந்த மாபெரும் வெற்றிக்குப் பிறகு குஜராத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவிக்க வேண்டும்.

தெலங்கானாவில் அண்மையில் நடந்து முடிந்த இடைத் தேர்தலில் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கோடிக்கணக்கின் பணத்தினை செலவு செய்து வெற்றி பெற்றது. தெலங்கானாவின் வளர்ச்சிக்கு இரட்டை என்ஜின் அரசு என்பது தவிர்க்க முடியாதது. மக்கள் லஞ்சமற்ற மற்றும் குடும்ப ஆட்சியில்லாத நிலையை மாநிலத்தில் விரும்புகிறார்கள். அதனை பாஜகவால் மட்டுமே தர முடியும். குஜராத் தேர்தலின் முடிவினைப் போன்ற முடிவையே தெலங்கானாவும் சந்திக்கும். மக்கள் ஆளும் சந்திரசேகர் ராவ் அரசுக்கு எதிராக உள்ளனர் என்றார்.

கடந்த சில ஆண்டுகளாக தெலங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு மாற்று சக்தியாக உருவெடுக்க பாஜக முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளி வருகிறது! 70% சலுகையில் பட்டாசு என்ற விளம்பர மோசடி!

தீர்ப்பு எதிரொலி: முதுநிலை ஆசிரியர் தேர்வு தொடங்கியது!

பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் தாக்குதல்! 12 பேர் பலி!

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மின்னல் தாக்கி சிகிச்சையிலிருந்த சிறுவன் பலி!

SCROLL FOR NEXT