இந்தியா

ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டம்: அடிக்கல் நாட்டிய தெலங்கானா முதல்வர்

DIN

31 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ ரயில் திட்டத்துக்கு தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் இன்று (டிசம்பர் 9) அடிக்கல் நாட்டினார்.

இந்த ஹைதராபாத் விமான நிலைய மெட்ரோ திட்டத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் சந்திரசேகர் ராவ், இந்த திட்டத்துக்கு சுமார் ரூ. 6,250 கோடி செலவாகும் எனத் தெரிவித்தார். 

இது குறித்து முதல்வர் சந்திரசேகர் ராவ் பேசியதாவது: இந்தத் திட்டம் 100 சதவிகிதம் அரசு மற்றும் ஜிஎம்ஆர் குழுமத்தினால் செயல்படுத்தப்படும் திட்டமாகும். மெட்ரோ ரயில் பயணம் மட்டுமே உலக அளவில் மாசற்ற பயணமாக உள்ளது. அத்தகைய மெட்ரோ ரயில் சேவையை ஹைதாராபாத்துக்கும் விரிவுப்படுத்த வேண்டும். மத்திய அரசு ஒத்துழைத்தாலும், ஒத்துழைக்காவிட்டாலும் நாம் மெட்ரோ திட்டங்களை செயல்படுத்துவோம். அனைத்து மதத்தினரும் ஒற்றுமையாக வாழும் தெலங்கானா தற்போது உலகத் தரத்துக்கு உயர்ந்துள்ளது. முன்னதாக பிரிக்கப்படாமல் ஆந்திரத்துடன் ஒன்றாக இருந்தபோது மாநிலத்தில் வளர்ச்சியே இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT