இந்தியா

ஓடிபி எல்லாம் வேண்டாம்.. பிளாங்க் கால் போதும்: அச்சுறுத்தும் புதிய மோசடி

DIN

புது தில்லி: தெற்கு தில்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாதுகாப்பு சேவை மையத்தின் இயக்குநர் ஒருவருக்கு வந்த பிளாங் கால் மூலம் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ.50 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

செல்லிடப்பேசிக்கு தொடர்ந்து கால் செய்து, அவர் அழைப்பை எடுத்த பிறகும், மற்றொரு பக்கத்திலிருந்து எந்த பதிலும் வரவில்லை. இப்படியே தொடர்ந்து பிளாங்க் கால் கொடுத்து 50 லட்சம் வரை அவரது வங்கிக் கணக்கிலிருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது. அதிர்ச்சி தரும் தகவல் என்னவென்றால், அவரிடம் எந்த ஓடிபியும் பெறவில்லை.

சில நாள்களுக்கு முன்பு, அந்த இயக்குநருக்கு இரவு 7 மணி முதல் 8.45 மணி வரை பல முறை பிளாங்க் அழைப்பு வந்துள்ளது. அடுத்த அழைப்பில் யாரும் பேசாததால் சில அழைப்புகளை அவர் எடுக்கவில்லை. பிறகு அவரது செல்லிடப்பேசிக்கு வந்த தகவலில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து 12 லட்சம், 4.6 லட்சம், இரண்டு முறை 10 லட்சம்  என நான்கு பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக அவர் புகார் அளிக்க, விசாரணை நடத்தியதில், வங்கிக் கணக்குக்கு பணம் சென்றவர்களை அழைத்து விசாரித்ததில், மோசடியாளர்கள், தரகு அளிப்பதாகக் கூறி தங்களது வங்கிக் கணக்கைக் கேட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சைபர் குற்றவாளிகள் அதிகளவில் பணத்தை அதுவும் புதிய முறையில் மோசடி செய்திருப்பதால், இது பதற்றத்தையும் பரபரப்பையும்  ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக பணப்பரிமாற்றங்கள் செய்யும் போல பல நிபந்தனைகள் இருக்கும். ஆனால், இயக்குநரின் வங்கிக் கணக்கு நடப்புக் கணக்கு என்பதால் அந்த கட்டுப்பாடுகள் இல்லை. இதனால், எந்த தடையும் இல்லாமல் மோசடி நடந்திருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், சிம் ஸ்வாப் முறையில், சைபர் குற்றவாளிகள் பணத்தை மோசடி செய்திருக்கலாம் என்றும், இரண்டு முறை நிரூபிக்கும் அல்லது இரண்டு முறை உறுதிப்படுத்தும் வங்கிக் கணக்கைத் திறக்கும் வாய்ப்புகளில் இருக்கும் சில தொழில்நுட்ப நுணுக்கங்களைப் பயன்படுத்தி மோசடியாளர்கள், ஒரு நபருக்கு அழைப்பு விடுத்து, அந்த சிம் கார்டை ஆக்டிவேட் செய்து அதன் மூலம் வங்கியிலிருந்து பணத்தை மோசடி செய்யும் புதிய யுக்தியை கையாண்டிருப்பதும் தெரிய வந்துள்ளது.

இதுபோல இந்த ஆண்டு துவக்கத்தில் இரண்டு தொழிலதிபர்களின் வங்கிக் கணக்கிலிருந்து வெறும் மிஸ்டு கால் கொடுத்து பணத்தை மோசடி செய்த தகவல்களும் வெளியாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் தன்னாா்வலராகப் பணியாற்ற விண்ணப்பிக்கலாம்

கயத்தாறு - பாஞ்சாலங்குறிச்சி, கோவில்பட்டி - பாஞ்சாலங்குறிச்சி  ஜோதி  தொடா்  ஓட்டம்: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

மயிலாடுதுறை: 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் 90.48 சதவீதம் தோ்ச்சி

விடுதலைப் போராட்ட ஆவணங்களை அருங்காட்சியகத்துக்கு வழங்கலாம்

எஸ்எஸ்எல்சி பொதுத் தோ்வு முடிவு: திருவாரூா் மாவட்டம் 92.49 சதவீதம் தோ்ச்சி

SCROLL FOR NEXT