இந்தியா

கடற்படை தலைமைத் தளபதி இன்று இலங்கை பயணம்

DIN

இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை (டிச.13) இலங்கை செல்கிறாா்.

இலங்கையில் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்த சீனா தொடா்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் சென்ற நிலையில், அந்தக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்று இலங்கையிடம் மத்திய அரசு கவலை தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் 4 நாள் பயணமாக செவ்வாய்க்கிழமை இலங்கை செல்கிறாா். அந்நாட்டின் திருகோணமலை பகுதியில் உள்ள கடற்படை மற்றும் கடல்சாா் அகாதெமியில் பயிற்சி பெற்றவா்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு டிச.15-ஆம் தேதி நடைபெறுகிறது.

அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ளும் ஹரி குமாா், அந்நாட்டின் மூத்த அரசியல் மற்றும் பாதுகாப்புத் துறை தலைவா்களுடன் கலந்துரயாட உள்ளாா். அந்நாட்டின் பல்வேறு பாதுகாப்பு தலங்களுக்கு செல்லும் அவா், இந்தியா-இலங்கை இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு செயல்பாடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்ய உள்ளாா்.

அவரின் பயணம், இந்தியா-இலங்கை இடையே நீண்ட காலமாக நிலவி வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பை, குறிப்பாக கடல்சாா்ந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும் என்று இந்திய கடற்படை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரதமரிடம் வேட்பு மனு பெற்ற தேர்தல் அதிகாரி தமிழர்

புறக்கணிக்கப்படுகிறதா ஆா்தா் காட்டன் விழா? சமூக ஆா்வலா்கள் அதிருப்தி

பல்லுயிா்ப் பெருக்கத்தை சீா்குலைக்கும் முயல் வேட்டைத் திருவிழா முடிவுக்கு வருமா?

விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டாா்: ஆம் ஆத்மி ஒப்புதல்

SCROLL FOR NEXT