புது தில்லி: நாட்டுக்கு ஒரு வேளை அதிர்ஷ்டம் இருந்தால், வரும் ஆண்டில் இந்தியா 5 சதவீத வளர்ச்சியை எட்டலாம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டைக் காட்டிலும் அடுத்த ஆண்டு மிகவும் கடினமானதாக இருக்கும் என்று கூறும் ரகுராம் ராஜன், போர் மற்றும் பல்வேறு காரணிகளால் பொருளாதாரம் மிகுந்த சிக்கலை சந்தித்து வருகிறது. உலகம் முழுவதும் வளர்ச்சியின் வேகம் என்பது குறைந்துள்ளது. வளர்ச்சியைக் குறைக்கும் வகையில் வட்டி விகிதங்கள் உயர்த்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க.. மெரீனாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
மேலும், இந்தியாவின் பொருளாதாரமும் இதனால் பாதிக்கப்படும். இந்தியாவின் வட்டி விகிதங்களும் உயர்ந்துள்ளன. ஆனால், இந்திய ஏற்றுமதி ஏற்கனவே இருந்ததை விட சற்றுக் குறைந்துள்ளது என்பதையும் ரகுராம் ராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்
இதையும் படிக்க.. சீனத்துக்கு என்னதான் பிரச்னை?
ஒரு வேளை நமக்கு அதிர்ஷ்டம் இருந்தால் வரும் ஆண்டில் 5 சதவீத வளர்ச்சியைக் காணலாம் என்று பொருளாதார நிபுணர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.