இந்தியா

கடைசி ரஃபேல் போர் விமானம் இந்தியா வந்தடைந்தது!

DIN

பிரான்ஸ் நாட்டில் இருந்து கடைசி ரஃபேல் போர் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. 

பிரான்ஸிடமிருந்து சுமார் ரூ.60,000 கோடியில் 36 ரஃபேல் போர் விமானங்களைக் கொள்முதல் செய்ய 2016, செப்டம்பர் மாதம் பிரதமர் நரேந்திர மோடி அரசு ஒப்பந்தம் செய்தது.

அதன்படி முதல்கட்டமாக கடந்த 2020 ஜூலை மாதம் முதல் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தன. ரஃபேல் போர் விமானங்கள் விமானப்படையுடன் சேர்க்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன. 

அந்த வகையில் பிரான்ஸின் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த 35 ரஃபேல் போர் விமானங்கள் இந்தியா வந்துள்ள நிலையில், கடைசி மற்றும் 36 ஆவது ரஃபேல் விமானம் இன்று இந்தியா வந்தடைந்தது. 

பிரான்ஸில் இருந்து புறப்பட்டு பின்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் எரிபொருள் நிரப்பிய பின்னர் இன்று பிற்பகல் இந்தியா வந்தடைந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மார்க் ஸுக்கர்பெர்க் பிறந்தநாள் இன்று!

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

SCROLL FOR NEXT