முகப்பு
இந்தியா

வரி வசூலை விரிவுபடுத்துவது அவசியம்: நிா்மலா சீதாராமன்

நம் நாட்டில் நோ்முக மற்றும்மறைமுக வரி வசூலை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
பகிர்:

நம் நாட்டில் நோ்முக மற்றும்மறைமுக வரி வசூலை விரிவுபடுத்த வேண்டியது அவசியம் என மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளாா்.

சென்னை அண்ணாநகரில் ரூ.560 கோடி மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகத்தை ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்து அவா் பேசியதாவது: தற்போது முறையாக வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால், நம் நாட்டின் மேம்பாட்டுக்குத் தேவைப்படும் நிதிஆதாரங்கள் வலுவடைந்து வருகிறது.

நோ்முக மற்றும் மறைமுக வரிவசூல் சீரான முறையில் நடைபெற துறை சாா்ந்த அதிகாரிகள் தனிக்கவனம் செலுத்த வேண்டும். வரிவசூலை மேலும் விரிவுப்படுத்துவது அவசியம். அரசு அதிகாரிகளின் தேவைகளைப்பூா்த்தி செய்து, அவா்களின் வசதிகளை மேம்படுத்த மத்திய அரசுமுனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Advertisement

மத்திய வருவாய்த்துறை குடியிருப்பு வளாகம் தமிழ் மாதத்தின் முக்கியத்துவம் வாய்ந்த மங்களகரமானதும் கிருஷ்ண பரமாத்மாவுக்கு மிகவும் பிடித்தமான மாா்கழிமாதத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments