இந்தியா

கூகுளில் மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டை மொழிபெயர்க்கும் வசதி!

கூகுள் விரைவில் மருத்துவரின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டை மொழிபெயர்க்க உதவும் வசதியை உருவாக்க உள்ளது.

DIN

கூகுள் விரைவில் மருத்துவரின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டை மொழிபெயர்க்க உதவும் வசதியை உருவாக்க உள்ளது.

கூகுள் திங்களன்று செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் இயந்திர கற்றல் (ML) மாதிரியை அறிவித்தது. இந்த தொழில்நுட்பத்தைக் கொண்டு  கடினமான மருத்துவர் கையால் எழுதப்பட்ட மருந்து சீட்டில் உள்ள எழுத்துகளை அடையாளம் காண முடியும்.

கடினமான கையால் எழுதப்பட்ட மருந்து சீட்டில் உள்ள மருத்துவக் குறிப்புகளை டீகோட் செய்யக்கூடிய AI கருவி கூகுள் லென்ஸில் உருவாக்கப்படும்.

கூகுல் நிறுவனம் தனது 'AI for India' நிகழ்வின் போது இந்த திட்டத்தை காட்சிப்படுத்தியது.

பொருட்களை (தாவரங்கள் மற்றும் விலங்குகள் போன்றவை) கண்டறிய மற்றும் மொழிகளை மொழிபெயர்க்க கூகுல் லென்ஸ் பயன்படுத்தப்படுகிறது.

இந்தியாவின் விவசாய நிலப்பரப்பைப் பற்றிய முழுமையான புரிதலை உருவாக்க, ரிமோட் சென்சிங் தொழில்நுட்பத்துடன் மேம்பட்ட AI மற்றும் ML திறன்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளையும் கூகுல் நிறுவனம் அறிவித்தது.

இந்த திட்டம் பண்ணை நிலப்பரப்பு மற்றும் பண்ணை எல்லைகளை அடையாளம் காண உதவும், மேலும் ஒவ்வொரு வயலில் விளையும் பயிர்களையும் அடையாளம் காண முடியும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT