இந்தியா

12-ம் வகுப்பில் 75% மதிப்பெண் எடுத்தால் உயர்கல்வி இலவசம்!

DIN

12ஆம் வகுப்பில் மாணவர்கள் 75 சதவிகித மதிப்பெண்களுக்கு மேல் பெரும் மாணவர்களின் உயர் கல்வி செலவை அரசே ஏற்கும் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தெரிவித்துள்ளார். 

பொறியியல், மருத்துவம், சட்டம் என எந்தத் துறை சார்ந்து படித்தாலும், அவர்களின் கல்லூரி கட்டண செலவை அரசே ஏற்கும் என உறுதி அளித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் சிவராஜ் சிங் செளஹான், மத்தியப் பிரதேசத்தில் பயிலும் பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பில் 75 சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தால், அவர்களின் கல்லூரி செலவை அரசே ஏற்கும். பொறியியல், மருத்துவம், சட்டம் என எந்தத் துறை சார்ந்து படித்தாலும், கல்லூரி கட்டண செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என உறுதி அளித்தார். 

மத்தியப் பிரதேசத்தில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி ஏற்கெனவே இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்போது உயர் கல்வியும் இலவசமாக்கப்பட்டுள்ளது. 

2023ஆம் ஆண்டு ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வுக்கும் பள்ளியில் பெறும் மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது, பள்ளியில் 75 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT