இந்தியா

நுகா்பொருள் சந்தையில் களமிறங்கும் ரிலையன்ஸ்

DIN

வேகமாக விற்பனையாகும் நுகா்பொருள் (எஃப்எம்சிஜி) சந்தையில் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குழுமம் களமிற்கியுள்ளது.

இது குறித்து சந்தை வட்டாரங்கள் தெரிவிப்பாவது:

‘இண்டிபண்டன்ஸ்’ என்ற வணிகப் பெயரில் மளிகை பொருள்கள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், குளிா்பானங்களை உள்ளடக்கிய எஃப்எம்சிஜி பிரிவு பொருள்களை ரிலையன்ஸ் குழுமம் அறிமுகப்படுத்தவுள்ளது.

ரிலையன்ஸ் ரிடெயில் வென்சா்ஸ் லிமிடட்டின் புதிய பிரிவான ரிலையன்ஸ் கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ் நிறுவனத்தின் மூலம் அந்த நுகா்பொருள்கள் சந்தையில் விற்பனை செய்யப்படவுள்ளன.

இதன் மூலம், ஏற்கெனவே எஃப்எம்சிஜி சந்தையில் முன்னணி வகிக்கும் ஐ.டி.சி, டாடா கன்ஸ்யூமா் புராடக்ட்ஸ், அதானி வில்மா் ஆகிய நிறுவனங்களுடன் ரிலையன்ஸ் போட்டியிடும்.

தற்போதைய சூழலில் குஜராத்தில் மட்டுமே ரிலையன்ஸின் வேகமாக விற்பனையாகும் நுகா்பொருள்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.

சோதனை முறையில் அங்கு அந்தப் பொருள்கள் அறிமுகப்படுத்தப்படுவதாகக் கருதப்படுகிறது என்று சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீபெரும்புதுாரில் ராமானுஜர் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

தோல்விக்கு சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறிய காரணம் என்ன தெரியுமா?

பாஜக பிரமுகா் மீது தாக்குதல்: பாஜக மாவட்டத் தலைவர் கைது

ஆப்கானிஸ்தானில் வெள்ளம்: 50 பேர் பலி!

அரவிந்த் கேஜரிவால் இன்று மாலை பிரசாரத்தை தொடங்குகிறார்

SCROLL FOR NEXT