இந்தியா

2022-ல் புற்றுநோயால் 14.61 லட்சம் பேர் பாதிப்பு: தமிழகத்தில்?

நாடு முழுவதும் 2022-ல் 14.61 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

நாடு முழுவதும் 2022-ல் 14.61 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத்தொடரில், இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் மற்றும் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பின் நிலவரம் குறித்து மத்திய சுகாதாரத்துறைக்கு கேள்வி எழுதியிருந்தார்.

இந்த கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் பாரதி பிரவீன்,

நாடு முழுவதும் இந்த ஆண்டில் 14,61,427 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் 2,10,958 பேர் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இந்தப் பட்டியலில் 5-ஆவது இடத்தில் தமிழகம்(93,536) உள்ளது.

நுரையீரல் புற்றுநோயால் 2020-ல் 98,278 பேரும், 2021-ல் 1,00,792 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டு 1,03,371 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2020ஆம் ஆண்டை ஒப்பிடும்போது, 5.2 சதவிகிதம் நுரையீரல் புற்றுநோய் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

உ.பி. மதுராவில் 10 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமை

இரு மாவட்டங்களில் இன்று கனமழை!

SCROLL FOR NEXT