தில்லியில் அடா்பனி, கடும் குளிர்: 2 வாரங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை!
தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக தில்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் குளிர்கால விடுமுறையை தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
புது தில்லி: தில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருவதன் காரணமாக தில்லியில் பள்ளிகளுக்கு 2 வாரம் குளிர்கால விடுமுறையை தில்லி கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.
இந்த வாரத் தொடக்கத்தில் இருந்து தில்லி மற்றும் வடமாநிலங்களில் அடா் பனிமூட்டம் நிலவி வருகிறது. வெப்பநிலையும் குறைந்துள்ளது. இதனால் சாலை மற்றும் ரயில்கள் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தில்லியில் ஐந்தாவது நாளாக அடா்பனிமூட்டம் நிலவியதால் காண்பு திறன் குறைந்திருந்ததால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் கண்ணுக்கு தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Advertisement
இதையும் படிக்க | கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
இந்நிலையில், மாணவர்களின் சிரமத்தை கருத்தில்கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கு ஜனவரி 1 முதல் ஜனவரி 12 ஆம் தேதி வரை 2 வாரம் விடுமுறை அறிவித்து தில்லி கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே, குளிர் காலநிலை மற்றும் அடர் மூடுபனி காரணமாக பல மாவட்டங்களில் பள்ளி வேலை நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.