முகப்பு
இந்தியா

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டிலேயே இப்படி ஒரு திருட்டா?

வீட்டு வேலை செய்வதுபோல வந்து நடித்து, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் மனைவியை ஏமாற்றி வீட்டிலிருந்த 87 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:11 AM
ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அலுவலர் வீட்டிலேயே இப்படி ஒரு திருட்டா?
பகிர்:

வீட்டு வேலை செய்வதுபோல வந்து நடித்து, ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியின் மனைவியை ஏமாற்றி வீட்டிலிருந்த 87 கிராம் தங்க நகைகளைத் திருடிச் சென்ற இரண்டு பெண்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் பெங்களூருவில் வசித்து வருகிறார். அவரது மனைவி காந்திமதி (56) காவல்நிலையத்தில் அளித்த புகாரில், சம்பவத்தன்று, காலை 8.30 மணிக்கு இரண்டு பெண்கள் வீட்டுக்கு வந்ததாகவும், தங்களை வீட்டு வேலை செய்வோர் என்று அறிமுகம் செய்து கொண்ட இருவரும், ஜனவரி 1ஆம் தேதி முதல் வேலைக்கு வருவதாகவும், எங்களது வேலையைப் பார்த்து ஊதியம் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

காந்திமதி சற்று யோசித்த நிலையில், உடனடியாக உங்கள் வீட்டை சுத்தம் செய்து காட்டுகிறோம். பிறகு எங்களை வேலைக்கு வைக்கலாமா வேண்டாமா என்பதை முடிவு செய்யுங்கள் என்று கூறி வெறும் 30 நிமிடத்தில் வீட்டைக் கூட்டி சுத்தம் செய்துவிட்டு 9 மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து கிளம்பிவிட்டனர்.

அவர்கள் கிளம்பிய சிறிது நேரத்தில், காந்திமதி தனது வீட்டில் இருந்த நெக்லஸ், செயின், கம்மல்கள், ஜிமிக்கி, மோதிரம் என 4.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான 87 கிராம் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதை அறிந்திருக்கிறார்.

இது குறித்து புகார் அளிக்கப்பட்டு பெண்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
 
முழு கட்டுரையைப் படிக்க →