இந்தியா

5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம்!

DIN

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை கட்டாயம் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். 

சீனா, ஜப்பான், தென்கொரியா, தாய்லாந்து, ஹாங்காங் ஆகிய ஐந்து நாடுகளில் இருந்து வருவோருக்கும் கரோனா பரிசோதனை கட்டாயம் நடத்தப்படும். 

புதிய வகை கரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் விதமாக மத்திய சுகாதாரத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 

சீனா உள்ளிட்ட 5 நாடுகளில் இருந்து வருவோருக்கு கரோனா அறிகுறி அல்லது கரோனா உறுதியாகும்பட்சத்தில் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டுப் பயணிகளில் 2 சதவீதம் பேருக்கு ரேண்டமாக பரிசோதனை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளில் கரோனா பரவல் அதிகரிக்கும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

வெளிநாட்டு பயணிகள் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை கட்டாயம் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

சீனாவில் புதிய கரோனா அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம்னி பேருந்தில் பயணித்த ஐடி பெண் ஊழியர் இறந்த நிலையில் மீட்பு

அயோத்தியில் ஜெயிக்குமா பாஜக?

செங்கல்பட்டு: அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதில் 4 பேர் பலி; 20 பேர் படுகாயம்!

சென்னை, 12 மாவட்டங்களில் காலை 10 வரை மழைக்கு வாய்ப்பு!

ஆலமலை பிரம்மேஸ்வர அய்யன் கோயிலில் குண்டம் விழா

SCROLL FOR NEXT