கோப்புப் படம் 
இந்தியா

3 ஆண்டுகளில் 41 விபத்துகள், 26 மரணங்கள்! எந்த இடம் தெரியுமா?

மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து, பகுதிகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது.

DIN


ஹரியாணா மாநிலத்திலுள்ள பானிபட் பகுதி அதிக விபத்துகள் நடக்கும் இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.     

தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 கோர விபத்துகள் நடந்துள்ளதாகவும், அதில் 26 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அந்தந்த மாநில அரசுகளுடன் சேர்ந்து, பகுதிகளை இணைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளை அமைத்து வருகிறது. மேலும், விபத்துகளைத் தவிர்க்கவும் மாநில அரசுகள் பல விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறது. எனினும் விதிமீறல், அதிக வேகம், கட்டுப்பாடற்ற இயக்கம் போன்றவற்றால் நெடுஞ்சாலைகளில் விபத்துகள் நேரிடுகின்றன.

அந்தவகையில் ஹரியாணா மாநிலம் பானிபட் பகுதியில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 41 விபத்துகள் நடந்துள்ளன. அதில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

தில்லி - அம்பாலா நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த பகுதியை அதிகாரிகள், கருப்பு இடமாக அறிவித்துள்ளனர். அதிக விபத்துகள் நேரிட்டு உயிரிழப்புகள் நிகழ்ந்ததால் அப்பகுதியை அதிகாரிகள் இவ்வாறு குறிப்பிடுகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோயில் தேருக்கு அமைக்கப்பட்ட கொட்டகை: எம்எல்ஏ திறந்துவைத்தாா்

கல்லூரி மாணவா் தற்கொலை

பழைய இரும்புக் கடையில் தீ விபத்து

சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த மூவா் மீது வழக்கு

ஆணவப் படுகொலையைக் கண்டித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT