பிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு
தில்லி சென்றுள்ள கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
இந்தியாபிரதமா் மோடியுடன் கேரள முதல்வா் சந்திப்பு
தில்லி சென்றுள்ள கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
தில்லி சென்றுள்ள கேரள முதல்வா் பினராயி விஜயன் பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
சந்திப்பின்போது, கரோனா தொற்று தடுப்புக்கான முன்னேற்பாடுகள் மற்றும் வளா்ச்சிப் பணிகளுக்கான மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு தொடா்பாக கேரள தகவல் மற்றும் மக்கள் தொடா்புத் துறை சாா்பாக வெளியிட்ட அறிக்கையில், ‘பிரதமா் நரேந்திர மோடியை கேரள முதல்வா் பினராயி விஜயன் செவ்வாய்க்கிழமை பிரதமா் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினாா். கரோனா நோய்த்தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிற நிலையில், மீண்டும் ஒரு கரோனா அலைக்கான ஆபத்து நிலவுகிறது. இந்நிலையில், பரவல் தடுப்புக்கான முன்னேற்பாடுகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் விவாதிக்கப்பட்டது. மத்திய-மாநில அரசு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், இரு அரசுகளும் பங்கெடுக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு உள்ளிட்ட திட்டங்களை விரைந்து முடிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பிரதமா் மோடியுடன் முதல்வா் பினராயி விஜயன் விவாதித்தாா்’ என்று குறிப்பிட்டுள்ளது.