ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கு: குற்றவாளிகளுக்கு ஜன.10 வரை நீதிமன்ற காவல்!  
இந்தியா

ஐசிஐசிஐ வங்கி முறைகேடு வழக்கு: மூவருக்கு ஜன.10 வரை நீதிமன்ற காவல்! 

ஐசிஐசிஐ வங்கி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

DIN

ஐசிஐசிஐ வங்கி பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும் 14 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐசிஐசிஐ வங்கி மற்றும் விடியோகான் குழும சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கு விசாரணையில் முன்னாள் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் மற்றும் விடியோகான் குழும நிறுவனர் வேணுகோபால் தூத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

முன்னதாக, குற்றவாளிகள் மூவரும் மூன்று நாள்கள் காவலில் வைக்கப்பட்ட நிலையில், காவலின் முடிவில் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையில் 3 பேரின் காவலை மேலும் 14 நாள்கள் நீடித்து ஜனவரி 10,2023 வரை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தா கோச்சாா் பதவிக் காலத்தில், வங்கி ஒழுங்குமுறைச் சட்டம், ஆா்பிஐ வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் ஐசிஐசிஐ வங்கி கொள்கைக்கு புறம்பாக விடியோகான் குழும நிறுவனங்களுக்கு ரூ.1,875 கோடி கடனுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாகவும் இதற்கு பிரதி பலனாக சந்தா கோச்சாரின் கணவரால் நிா்வகிக்கப்படும் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி கைமாறியதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது. இந்தக் கடன் திரும்பச் செலுத்தப்படாததுடன், வங்கிக்கு ரூ.1,730 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் வங்கி தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக இந்திய தண்டனையியல் சட்டம், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் சந்தா கோச்சாா், அவரது கணவா் தீபக் கோச்சாா் மற்றும் விடியோகான் குழும தலைவா் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது. 

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட மூவரின் நீதிமன்ற காவல் மேலும் 14 நாள்கள் நீட்டித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

நவி முமையில் நடனப் பாரை தாக்கி சேதப்படுத்திய நவநிர்மாண் சேனை தொண்டர்கள் !

ஆடிப்பெருக்கு தீர்த்தவாரி: கொள்ளிடம் ஆற்றில் எழுந்தருளிய நடராஜர்!

யோவ் நான் கேட்டனா...? லோகேஷ் கனகராஜை கிண்டல் செய்த ரஜினி!

பாஜக கூட்டணியால் உண்மையான அதிமுக தொண்டர்கள் அதிருப்தி: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT