இந்தியா

பிரதமர் மோடியின் தாயார் மறைவு: அரசியல் தலைவர்கள் இரங்கல்

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

DIN

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி இன்று(டிச.30) உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 100. 

ஹீராபென் மோடி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் (டிச. 28) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார். நேற்று பிரதமர் மோடி மருத்துவமனைக்குச் சென்று தனது தாயை நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ராஜ்நாத் சிங், மாநில ஆளுநர்கள், அமித் ஷா, எல். முருகன் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், பாஜக மூத்த தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் என பலரும் ஹீராபென் மோடி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனுஷ்காவின் காதி டிரைலர்!

தில்லியில்.. 8 வங்கதேசத்தினர் உள்பட 22 வெளிநாட்டவர் வெளியேற்றம்!

ரஷியாவுடன் வர்த்தகம்! இந்தியாவின் கேள்விக்கு டிரம்ப்பின் மழுப்பல் பதில்!

ரூ. 22,000 தள்ளுபடியில் கூகுள் பிக்சல் 9 ஸ்மார்ட்போன்! எங்கு, எப்படி பெறலாம்?

நீதிமன்ற அவமதிப்பு: பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடுப்போம்! - பாஜக

SCROLL FOR NEXT