கோப்புப் படம் 
இந்தியா

ஆப்கனில் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறப்பு

ஆப்கானிஸ்தானில் உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பொதுப் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

DIN

ஆப்கானிஸ்தானில் உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, பொதுப் பல்கலைக்கழகங்கள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. 

ஆப்கனில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக்குழு வெளியிட்ட டிவிட்டர் பதிவில், 

ஒவ்வொரு இளைஞனுக்கும் கல்விக்குச் சமமான அணுகல் உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் பிப்.2 முதல் பொது பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என்ற அறிவிப்பை ஐ.நா வரவேற்கிறது. 

ஆப்கானிஸ்தானின் உயர்கல்வி அமைச்சகத்தின் அறிவிப்பின் அடிப்படையில், வெப்பமண்டலமற்ற மாகாணங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள் மார்ச் மாதத்தில் மீண்டும் தொடங்கும். அதேநேரத்தில் அனைத்து மாகாணங்களிலும் புதிய கல்வியாண்டு ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று காமா பிரஸ் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, கடந்த ஆறு மாதத்தில் மொத்தம் 150 பொதுப் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருமல் மருந்து மரணங்கள்: நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உடல் கூராய்வு: ரௌடி நாகேந்திரனின் மனைவி கோரிக்கை நிராகரிப்பு!

ஆவடி ராணுவ வாகன தொழிற்சாலையில் வேலை!

டெஸ்ட்டில் 7-ஆவது சதமடித்த ஜெய்ஸ்வால்..! சச்சின் சாதனைகளுக்கு ஆபத்து!

தமிழ்நாடு ஒத்துழைக்கவில்லையா? ம.பி. அரசுக்கு மா. சுப்பிரமணியன் பதில்!

SCROLL FOR NEXT