இந்தியா

எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிராக 5,000 வழக்குகள்; உ.பி.க்கு முதலிடம்: உச்ச நீதிமன்றம்

IANS


புது தில்லி: நாட்டில் தற்போது பதவியிலிருக்கும் எம்பி, எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகள் 2018ஆம் ஆண்டு 4,110-லிருந்து, 2021 டிசம்பரில் 4,984 ஆக அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நண்பராக (அமிகஸ் கியூரி) செயல்படும் மூத்த வழக்குரைஞர் விஜய் ஹன்சாரியா தாக்கல் செய்த அறிக்கையில், இந்த வழக்குகளில் சில 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளன. 2,324 வழக்குகள் தற்போது பதவியிலிருக்கும் எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரானது. 1,675 வழக்குகள் முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கு எதிரானவை. 264 வழக்குகள், நீதிமன்ற தடை உத்தரவுகளால் நிலுவையில் உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அதிகபட்சமாக 1,339 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பிகாரில் 571 வழக்குகளும் நிலுவையில் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT