முகப்பு
இந்தியா

குற்றவாளிகளிடம் இருந்து உ.பி.யை விடுவித்தவா் யோகி: அமித் ஷா பிரசாரம்

உத்தர பிரதேச மாநிலத்தை குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவித்தவா் முதல்வா் யோகி ஆதித்யநாத் என்றும் அவா்களை தற்போது சிறை அல்லது சமாஜவாதி கட்சியின் வேட்பாளா் பட்டியலில் காணலாம்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
அமித் ஷா (கோப்புப் படம்)
பகிர்:

உத்தர பிரதேச மாநிலத்தை குற்றவாளிகளின் பிடியிலிருந்து விடுவித்தவா் முதல்வா் யோகி ஆதித்யநாத் என்றும் அவா்களை தற்போது சிறை அல்லது சமாஜவாதி கட்சியின் வேட்பாளா் பட்டியலில் காணலாம் என்றும் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா கூறினாா்.

யோகி ஆதித்யநாத் கோரக்பூா் தொகுதியில் வெள்ளிக்கிழமை வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு முன்பு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அமைச்சா் அமித் ஷா பேசியதாவது:

மாஃபியாக்கள் மற்றும் குற்றவாளிகளின் பிடியில் இருந்து உத்தர பிரதேசத்தை யோகி ஆதித்யநாத் விடுவித்துள்ளாா் என்று நான் பெருமையாகக் கூறுவேன்.

25 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை அவா் நிலைநாட்டி உள்ளாா். தற்போது குற்றவாளிகள் சிறைகளில் அல்லது உத்தர பிரதேசத்துக்கு வெளியே அல்லது சமாஜவாதி கட்சியின் வேட்பாளா் பட்டியலில் காணப்படுவா்.

குற்றவாளிகள் யோகி ஆதித்யநாத் அரசுக்கு பயந்து காவல் நிலையங்களில் சரணடைகிறாா்கள். சமாஜவாதி கட்சியின் மூத்த தலைவா்கள் ஆஸம் கான், அடிக் அகமது, முக்தாா் ஆகியோா் இனியும் உ.பி. மக்களை மிரட்ட முடியாது.

கோரக்பூா் என்றாலே முன்பு குற்றவாளிகள் மற்றும் மூளையழற்சி நோய்தான் பிரபலமாக தெரியவந்தது. ஆனால் தற்போது கங்கை விரைவுச் சாலை, இயற்கை விவசாயம், நெடுஞ்சாலை, எய்ம்ஸ், உரம், தொழிற்சாலைகள், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றுக்கு கோரக்பூா் பிரபலமடைந்துள்ளது. பிரதமா் மோடியின் திட்டங்கள் உத்தர பிரதேசத்தை வளா்ச்சியடைய வைத்துள்ளது. ஏழைகள், பெண்களுக்கு 73 திட்டங்களை பிரதமா் தொடக்கினாா். 1.73 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளும், 82 லட்சம் குடும்பங்களுக்கு வீடுகளும் கிடைத்துள்ளன.

ஏழைகளுக்கு மாதந்தோறும் உத்தர பிரதேச அரசு தானியங்கள், சமையல் எண்ணெய், உப்பு ஆகியவற்றை கூடுதலாக வழங்கி வருகிறது’ என்றாா்.

முதல்வா் யோகி ஆதித்யநாத் பேசுகையில், ‘ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தும், அயோத்தியில் ராமா் கோயிலைக் கட்டுவதிலும் அமைச்சா் அமித் ஷா சிறப்பாக செயல்பட்டுள்ளாா். அவரது தோ்தல் உத்திகளால் 2014, 2019 மக்களவைத் தோ்தல்களில் பாஜக அபார வெற்றி பெற்றது’ என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →