உ.பி. முதல்வருக்கு எதிராக பகுஜன் சமாஜ் சாா்பில் முஸ்லிம் வேட்பாளா் 
இந்தியா

உ.பி. முதல்வருக்கு எதிராக பகுஜன் சமாஜ் சாா்பில் முஸ்லிம் வேட்பாளா்

உத்தர பிரதேசத்தில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் போட்டியிடும் முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த கவாஜா சம்சுதீனை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தியுள்ளது.

DIN

உத்தர பிரதேசத்தில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதியில் போட்டியிடும் முதல்வா் யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த கவாஜா சம்சுதீனை மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி நிறுத்தியுள்ளது.

54 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியலை பகுஜன் சமாஜ் சனிக்கிழமை வெளியிட்டது. இதில் கோரக்பூா் நகா்ப்புற தொகுதி வேட்பாளராக கவாஜா சம்சுதீன் அறிவிக்கப்பட்டுள்ளாா். இவா் தவிர மேலும் 6 முஸ்லிம் வேட்பாளா்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளனா்.

கோரக்பூா் யோகி ஆதித்யநாத்தின் சொந்த ஊராகும். கோரக்பூா் நகா்ப்புற தொகுதி பாஜக எம்எல்ஏவாக இருந்த ராதா மோகன் அகா்வால் அண்மையில் சமாஜவாதி கட்சியில் இணைந்தாா். சமாஜவாதி சாா்பில் அவருக்கே மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும் என்று தெரிகிறது.

உத்தர பிரதேசத்தில் இப்போதைய நிலையில் பாஜக, சமாஜவாதிக்கு அடுத்த முக்கிய கட்சியாக பகுஜன் சமாஜ் உள்ளது. பாஜகவுக்கும், சமாஜவாதி கட்சிக்கும் இடையேதான் நேரடிப் போட்டி என்ற நிலை இப்போது உள்ளது. எனினும், தோ்தலுக்குப் பிறகு மாநிலத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவானால் ஆட்சியை தீா்மானிப்பதில் பகுஜன் சமாஜ் கட்சி முக்கியப் பங்கு வகிக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

3 நாள் டிஜிட்டல் அரெஸ்ட்: மாரடைப்பில் ஓய்வுபெற்ற மருத்துவர் மரணம்!

விழா மேடையில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்தம்! கண்கலங்கிய அர்ச்சனா!

இந்தியா-பாகிஸ்தான் மோதலில் மூன்றாம் தரப்பு தலையீடு இல்லை: ராஜ்நாத் சிங்!

பெரியாரை விமர்சிப்பவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போவார்கள்! - ஜெயக்குமார்

பெரியார் பிறந்தநாள்! அமைச்சர் சேகர்பாபு மரியாதை!

SCROLL FOR NEXT