இந்தியா

ஒடிசாவில் புதிதாக 1,500 பேருக்கு கரோனா பாதிப்பு: பலி 20

DIN

ஒடிசா மாநிலத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி நோய்த் தொற்றுக்கு 20 பேர் பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் 1,497 பேர் கரோனா தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 

தினசரி தொற்று விகிதம் 3.18 ஆக உள்ளது. முந்தைய நாள் 3.48 ஆக இருந்தது. 

புவனேஸ்வரில் 5 புதிய இறப்புகள் பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து கலாஹண்டியில் 4 பேர் மற்றும் கட்டாக் மாவட்டத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 8,754 ஆக உள்ளது. 

குர்தா மாவட்டத்தில் 251 நோய்த்தொற்றுகளுடன் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் மாநிலத்தில் புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 283 குழந்தைகள் ஆவர்.

தற்போது சிகிச்சையில் 21,525 பேர் உள்ளனர். இதில் சிவப்பு மண்டலத்தில் உள்ள குர்தாவில் 4,622 பேர் மருத்துவச் சிகிச்சையில் உள்ளனர். 

சுந்தர்கர், கட்டாக் மற்றும் ஜாஜ்பூர் மாவட்டங்களில் 1,000க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் மஞ்சள் மண்டலத்தில் உள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 3,624 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளனர்.

ஒட்டுமொத்த கரோனா பாதிப்பு 12,68,308 ஆகவும், இதில் 12,37,976 குணமடைந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT