இந்தியா

நான் பறவை; சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன்: ஓவைசி

DIN

குடியுரிமை திருத்தச் சட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் உயிரை விட எனது உயிர் மதிப்பானது இல்லை என்று அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இதஹதுல்-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் இசட் பிரிவு பாதுகாப்பு தனக்குத் தேவையில்லை என்று ஓவைசி மறுத்திருந்த நிலையில், பாதுகாப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பாஜக உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டுக்கொண்டார். 

அதற்கு பதிலளித்த ஓவைசி, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த 22 பேரின் உயிரை விட எனது உயிர் மதிப்பானது இல்லை. துப்பாக்கிகளுடன் என்னைச் சுற்றி இருப்பதை நான் விரும்பவில்லை. நான் சுதந்திரப் பறவை. சுதந்திரமாக இருக்கவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நித்திரவிளை அருகே படியிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT