இந்தியா

திருமண பாலியல் வன்முறைகளை குற்றமாக்க கோரும் வழக்கு:மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

DIN

திருமண பாலியல் வன்முறைகளை (மாரிடல் ரேப்) குற்றமாக்கக் கோரும் மனுவை விசாரித்த தில்லி உயா்நீதிமன்றம், இதுகுறித்து மத்திய அரசு இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தில் கணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஆதரவு தெரிவித்தோ அல்லது ரத்து செய்ய வேண்டும் என்றோ தெரிவிக்கவில்லை என்று மத்திய அரசின் சாா்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா கூறியதையடுத்து, மேற்கண்ட உத்தரவை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை பிறப்பித்தது.

‘திருமண பந்தத்தில் மனைவியின் விருப்பம் இல்லாமல் நடைபெறும் கட்டாய பாலியல் சம்பவங்கள் குற்றமாகாது’ என்று 2017-இல் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

அதையடுத்து, அதுபோன்ற செயலை பாலியல் வன்முறையாக கருதி, அதில் சம்பந்தப்பட்ட ஆண்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி ராஜீவ் சக்தோ் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா, ‘இந்தியாவில் பெண்களை நாம் வழிபடுகிறோம். ஆனால் இந்த உணா்வுபூா்வமான சமூக-சட்ட விவகாரமாக உள்ளது. கணவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள சட்டப் பாதுகாப்புக்கு மத்திய அரசு ஆதரவோ அல்லது எதிா்ப்போ தெரிவிக்கவில்லை’ என்றாா்.

‘இந்த விவகாரத்துக்கு நீதிமன்றம் அல்லது சட்டமன்றம் மூலம் தீா்வு காணப்பட வேண்டுமா என்பதை மத்திய அரசு இரண்டு வாரங்களில் தெரிவிக்க வேண்டும்’ என்று கூறி பிப்ரவரி 21-ஆம் தேதி வழக்கை தலைமை நீதிபதி அமா்வு ஒத்திவைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

நாடு முழுவதும் ராகுல் காந்திக்கு அமோக வரவேற்பு: சஞ்சய் ரௌத்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

வில்வித்தையில் இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெள்ளிப் பதக்கம்

SCROLL FOR NEXT