இந்தியா

பி.எம். கேர்ஸ் நிதி: ராகுல் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம்

DIN

பி.எம். கேர்ஸ் நிதி தொடர்பான ராகுல் குற்றச்சாட்டு உண்மையில்லை என்று மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

2020-21 நிதியாண்டில் பி.எம். கேர்ஸ் நிதியாக ரூ. 10,990 கோடி பெறப்பட்டுள்ளதாகவும் அதில் ரூ. 3,976 கோடி, அதாவது மூன்றில் ஒரு பங்கு செலவிடப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. 

இதையடுத்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, 'பிரதமர் பொய் சொல்கிறார்' என்று ட்விட்டரில் கூறியிருந்தார். 

இந்நிலையில்  ராகுலின் குற்றச்சாட்டுக்கு மத்திய அரசு விளக்கம் தெரிவித்துள்ளது. 

'கரோனா நிவாரணம் தொடர்பான பல்வேறு முயற்சிகளுக்காக பி.எம். கேர்ஸ் நிதியில் இருந்து ரூ. 7,690 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 2021 வரை அந்த  நிதி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டது. 

நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன் உற்பத்திக்கு 1200-க்கும் மேற்பட்ட ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் ஒரு லட்சம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. சுமார் 50,000 வென்டிலேட்டர்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த நிதியிலிருந்து 6.6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் நாடு முழுவதும்  3,500 க்கும் மேற்பட்ட கரோனா படுக்கைகளை அமைக்கவும் இந்த நிதியே பயன்படுத்தப்பட்டது.

மேலும் அவசர காலங்களில் தேவைகளை பூர்த்தி செய்ய பி.எம். கேர்ஸ் நிதியில் போதுமான இருப்பை பராமரிப்பதும் முக்கியம்' என்று மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

கிராமங்ளில் குடிநீா் பற்றாக்குறை : ஒன்றியக்குழு தலைவா் ஆய்வு

ஸ்ரீ நிகேதன் மெட்ரிக் பள்ளியில் 399 போ் தோ்ச்சி

திருவள்ளூா் மாவட்டத்தில் 91.32% தோ்ச்சி

SCROLL FOR NEXT