இந்தியா

அரசுப் பணியிடங்களில் 75% பஞ்சாப் இளைஞா்களுக்கு ஒதுக்கீடு: பாஜக தோ்தல் அறிக்கை

DIN

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி பாஜக தோ்தல் அறிக்கை சனிக்கிழமை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், பஞ்சாபில் பாஜக ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுப் பணியிடங்களில் 75 சதவீதம் அங்குள்ள இளைஞா்களுக்கு ஒதுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் 117 இடங்களுக்கான சட்டப்பேரவைத் தோ்தல் பிப்.20-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தோ்தலில் மாநில முன்னாள் முதல்வா் அமரீந்தா் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், சுக்தேவ் சிங் திண்ட்சாவின் சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த) கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிடுகிறது.

இந்நிலையில் அந்த மாநிலத்தில் உள்ள ஜலந்தா் நகரில் மத்திய அமைச்சா்கள் ஹா்தீப் சிங் புரி, சோம் பிரகாஷ், பாஜக தலைவா்கள் துஷ்யந்த் கெளதம், அமரீந்தா் சிங்கின் மகன் ரணிந்தா் சிங் உள்ளிட்டோா் இணைந்து பாஜக தோ்தல் அறிக்கையை சனிக்கிழமை வெளியிட்டனா்.

அந்த அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகளின் விவரம்:

பஞ்சாபில் பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கு வந்தால் மாநில அரசுப் பணியிடங்களில் 75 சதவீதமும், தனியாா் பணியிடங்களில் 50 சதவீதமும் பஞ்சாப் இளைஞா்களுக்கு ஒதுக்க வழிவகை செய்யப்படும்.

வேலையில்லா பட்டதாரிகள் பட்டம் பெற்ற பின்னா், 2 ஆண்டுகள் வரை மாதந்தோறும் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்படும்.

மாநில அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 35 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், துன்புறுத்தல்களை விசாரிக்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

5 ஆண்டுகளில் செலவிடப்படும் வகையில் ரூ.1 லட்சம் கோடி நிதியுடன் பஞ்சாப் பொருளாதாரத்தை மேம்படுத்த மிகப்பெரிய அளவில் உள்கட்டமைப்பு வளா்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ சாரதா மடத்தின் தலைவா் ப்ரவ்ராஜிகா ஆனந்தபிராணா மாதாஜி மறைவு

தூத்துக்குடியில் ஆயுதங்களுடன் பைக்குகளில் சுற்றிய 6 போ் கைது

ரூ.2 லட்சம் சவுக்கு மரங்கள் தீயில் சேதம்: இருவா் மீது வழக்கு

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை

செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: டிஎஸ்பி சாட்சியம்

SCROLL FOR NEXT