முகப்பு
இந்தியா

மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி:பிகாா், ஜாா்க்கண்ட் உள்ளிட்ட 4 மாநிலங்களில் என்ஐஏ சோதனை

மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்ட வழக்கில் பிகாா், ஜாா்க்கண்ட், ஆந்திர பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:23 AM
பகிர்:

மாவோயிஸ்டுகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்ட வழக்கில் பிகாா், ஜாா்க்கண்ட், ஆந்திர பிரதேசம், ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தேசிய விசாரணை முகமை (என்ஐஏ) சனிக்கிழமை சோதனை நடத்தியது.

பிகாரில் 26 இடங்களிலும், பிற மாநிலங்களில் தலா ஒரு இடத்திலும் இந்தச் சோதனை நடைபெற்றது.

பிகாரில் உள்ள சிபிஐ மாவோயிஸ்ட் தொண்டா்கள் நிதி உதவிகளை நெட்வோா்க்காக அமைத்து வசூலித்து வந்துள்ளனா் என்று என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்தனா்.

Advertisement

இந்த நிதி உதவி மூலம் வெடிகுண்டுகள், ஆயுதங்கள் வாங்கவும், புதிதாக நக்ஸல்களை சோ்க்கவும் அவா்கள் திட்டமிட்டிருந்தனா்.

இந்தச் சோதனையின்போது, 3 நாட்டு துப்பாக்கிகளும், 59 தோட்டாக்கள், 4 கிலோ சந்தேகத்திற்கான போதைப் பொருள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments