இந்தியா

மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் யாருக்காவது கிடைத்ததா? பஞ்சாபில் ராகுல் கேள்வி

DIN

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூ. 15 லட்சம் பணம் யாருக்காவது கிடைத்ததா என பஞ்சாப் பிரசாரத்தி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி திங்கள்கிழமை கேள்வி எழுப்பினார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹோஷியார்பூர் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

“விவசாயிகளின் உழைப்பை நாட்டின் 2 அல்லது 3 பணக்காரர்களுக்கு பிரதமர் மோடி தர முயற்சித்ததால், ஓர் ஆண்டாக குளிரில் பசியுடன் விவசாயிகள் இருந்தனர். போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு நாடாளுமன்றத்தில் 2 நிமிடங்கள் கூட அவரால் அஞ்சலி செலுத்த முடியவில்லை. இழப்பீடும் வழங்கவில்லை. ஆனால், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அரசுகள் இழப்பீடு வழங்கியுள்ளன.

பிரதமர் மோடியின் பேச்சில் ஒவ்வொரு முறையும், மக்களின் வங்கி கணக்குகளில் ரூ. 15 லட்சம் போடப்படும், 2 கோடி வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனக் கூறினார். யாருக்காவது கிடைத்ததா? ஊழல், வேலைவாய்ப்பு பற்றி ஏன் பேசவில்லை? பணமதிப்பு நீக்கம் செய்தார், ஜிஎஸ்டி வரியை விதித்தார். இதன்மூலம் யாருக்கு பலன் கிடைத்தது?” என சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஐடி வேந்​தர் கோ.வி​சு​வ​நா​த​னுக்கு மேலும் ஒரு கௌ​ரவ டாக்​டர் பட்டம்

நாட்டின் வளர்ச்சியில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு

பாலம் கட்டுமானப் பணிகள்: ஆணையர் ஆய்வு

'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்: மம்தா பானர்ஜி

லக்னௌவை வென்றது டெல்லி: "பிளே-ஆஃப்' சுற்றில் ராஜஸ்தான்

SCROLL FOR NEXT