அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

‘பஞ்சாப் பாதுகாப்பிற்காக மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்’: கேஜரிவால்

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

DIN

ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் பாதுகாப்பை உறுதி செய்ய மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளன. இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த தேர்தலில் ஆளும் காங்கிரஸ், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மி தனித்து போட்டியிடுகின்றன. 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் கேஜரிவால் பேசியதாவது:

“ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரக்கூடாது என அனைத்துக் கட்சிகளும் இணைந்துள்ளனர். நேர்மையான ஆம் ஆத்மி ஆட்சிக்கு வரும். ஆம் ஆத்மி அரசு அமைத்தால், தங்கள் கொள்ளை நிரந்தரமாக முடிந்துவிடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

தேசிய பாதுகாப்பில் ஆம் ஆத்மி ஒருபோதும் சமரசம் செய்யாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பஞ்சாப் மற்றும் நாட்டின் பாதுகாப்பு பிரச்னைகளில் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம். பிரதமரின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியல் செய்திருக்கக்கூடாது. ஆனால், இரு தரப்பினரும் அரசியல் செய்துள்ளனர்.”
 be fine!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

விமானப் பணியாளரைத் தாக்கிய ராணுவ அதிகாரி மீது நடவடிக்கை: 5 ஆண்டுகள் விமானத்தில் பறக்க தடை!

SCROLL FOR NEXT