இந்தியா

பஞ்சாப் நடிகா் தீப் சித்துவின் உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைப்பு

ANI

சோனிபட்: ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே சாலை விபத்தில் காலமான பஞ்சாப் நடிகா் தீப் சித்துவின் உடல், உடற்கூராய்வுக்குப் பிறகு அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

தில்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று செங்கோட்டையில் நடந்த வன்முறையில் குற்றம்சாட்டப்பட்ட பஞ்சாப் நடிகா் தீப் சித்து, ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காலமானாா்.

இந்த விபத்து குறித்து சித்துவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், சோனிபத் காவல்துறையினர், லாரி ஓட்டுநருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள். 

விபத்து குறித்து காவல் துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது:
தில்லியில் இருந்து பஞ்சாபில் உள்ள பதிண்டாவுக்கு தீப் சித்து செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டுச் சென்றாா். இரவு 9.30 மணியளவில் ஹரியாணா மாநிலம், சோனிபத் அருகே குண்ட்லி-மானேசா்-பல்வல் விரைவுவழிச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் நின்றுகொண்டிருந்த லாரி மீது தீப் சித்துவின் காா் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீப் சித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். அவருடன் வந்த பெண் பலத்த காயமைடந்தாா். அவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என்றாா் அந்த காவல் துறை அதிகாரி.

தில்லியில் கடந்த ஆண்டு குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டா் பேரணியின்போது செங்கோட்டை பகுதியில் வன்முறை வெடித்தது. அதற்கு முக்கியக் காரணமாக தீப் சித்து மீது குற்றம்சாட்டப்பட்டது.

அதைத்தொடா்ந்து தலைமறைவாக இருந்த அவா், பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டாா். ஏப்ரல் மாதம் ஜாமீனில் வெளியே வந்த நிலையில் மீண்டும் கைதாகி ஏப்ரல் இறுதியில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா். தேவைப்படும் நேரத்தில் காவல் துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தில்லி நீதிமன்றம் நிபந்தனை விதித்திருந்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT