முகப்பு
இந்தியா

முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவில் சமாஜவாதி சதம்: அகிலேஷ்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவில் சமாஜவாதி சதமடித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
கோப்புப்படம்
பகிர்:


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலின் முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவில் சமாஜவாதி சதமடித்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் 113 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு முதலிரண்டு கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. 59 தொகுதிகளுக்கு 3-வது கட்டமாக பிப்ரவரி 20-ம் தேதி நடைபெறுகிறது.

இந்த நிலையில் பிரோஸாபாத்தில் பிரசாரம் மேற்கொண்ட அகிலேஷ் பேசியதாவது:

"முதலிரண்டு கட்ட வாக்குப் பதிவில் ஏற்கெனவே சதமடித்துவிட்டோம். 4-வது கட்ட வாக்குப் பதிவில் ஆட்சியமைப்பதற்கான இடங்களைக் கைப்பற்றிவிடுவோம்.

ஜனநாயகம், அம்பேத்கரின் அரசியலமைப்புச் சட்டம், அவமானப்படுத்தப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்கள், தலித் மற்றும் சிறுபான்மையினரின் மரியாதை ஆகியவற்றைக் காப்பதற்கான தேர்தல் இது. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்கப்படும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை.

சட்டத்தை மதிக்காமல் அதை மீறுபவர்கள் சமாஜவாதி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை மீண்டுமொரு முறை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் அவர்.

முழு கட்டுரையைப் படிக்க →