முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீா் பாதுகாப்புச் சூழல்: அமித் ஷா ஆய்வு

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
பகிர்:

ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இதுதொடா்பாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘‘சா்வதேச எல்லைப் பகுதி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதி உள்பட ஜம்மு-காஷ்மீரில் நிலவும் பாதுகாப்புச் சூழல், அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகள் குறித்து அமித் ஷா ஆய்வு மேற்கொண்டாா்.

இந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, மத்திய அரசு மற்றும் ஜம்மு-காஷ்மீா் அதிகாரிகள் பங்கேற்றனா்’’ என்று தெரிவித்தன.

முழு கட்டுரையைப் படிக்க →